''கூகுளின் பணி நீக்கத்தில் இது ஒரு ரகம்..'' ஒருமாத பெண் குழந்தைக்கு புட்டி பால் புகட்டிக் கொண்டிருந்த போது பணிநீக்கம்..!

0 2128

தனது ஒருமாத பெண் குழந்தைக்கு புட்டி பால் புகட்டிக் கொண்டிருந்த போது தான் கூகுள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான இ-மெயில் செய்தியை தெரிந்துக் கொண்டேன் என்று சமூகவலைத்தளத்தில் கூகுள் ஊழியர் பகிர்ந்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், தங்களது பணிநீக்க அறிவிப்பை எவ்வாறு பெற்றார்கள் என்பதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த நிக்கோலஸ் டுஃபாவ் என்ற கூகுள் சட்டப்பணியாளர், அதிகாலை 2 மணிக்கு பணிநீக்க செய்தியை அறிந்ததாக பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments