இலவச வீட்டுமனை கோரி மனு.. ஒருநாள் 'அட்ஜெஸ்ட்' செய்ய சொல்லி மெசேஜ் அனுப்பிய கிராம நிர்வாக அலுவலர்.. புரட்டி எடுத்த பெண்....

0 36462

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் ஜெகன் அண்ணா இலவச வீட்டு மனை கோரி விண்ணப்பித்த பெண்ணிடம், ஒரு நாள் 'அட்ஜஸ்ட்' செய்ய சொல்லி வாட்ஸ்அப்பில் மெஸேஜ் அனுப்பிய கிராம வருவாய் அதிகாரியை, கணவர் மற்றும் குடும்பத்தினருடன் அலுவலகத்திற்கே வந்து பெண் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

பைக்காராவ்பேட்டை அருகேயுள்ள பி.எல்.புரம் கிராமத்தில் வசிக்கும் பெண்ணுக்கு, கிராம வருவாய் அதிகாரி பாஸ்கர் நாயுடு, இலவச வீட்டுமனை வேண்டும் என்றால், தன்னுடன் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டும் என, வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments