பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து-3 சிறுவர்கள் உள்பட 4 பேர் பலி

0 1157

பிரேசிலில், பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஜூனியர் கால்பந்து அணியை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

அலெம் பரைபா (Alem Paraiba) நகரில் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Vila Maria Helena கால்பந்து கிளப்பை சேர்ந்த அணிகள், கோபா தேசிய போட்டியில் கோப்பையை வென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments