பேனா நினைவு சின்னம்.. கடலுக்குள் வைத்தால் நான் உடைப்பேன்.. சீமானின் வேற லெவல் சம்பவம்..

0 3442

கலைஞர் கருணாநிதியின் நினைவாக கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைத்தால் உடைக்கப்படும் என்று பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது...

சென்னை மெரீனா கடலுக்குள் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

நினைவுச்சின்னம் வைக்க வேணாமுன்னு சொல்லலை, கடலுக்குள் அமைப்பதற்கு தான் எதிர்க்கிறோம் என்றும் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் என்றார் அப்போது ஒரு தரப்பினர் கோஷமிட்டனர் இதையடுத்து ஆவேசமான சீமான் , நீ கடலுக்குள் பேனாவ வையி.... ஒரு நாள் நான் வந்து உடைக்கிறேனா இல்லையா பார்... என்று கூறினார்

கோசமிட்டவர்களை நோக்கி, பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை... பேனா வைக்க காசு எங்கிருந்து வந்தது..? என்று கேள்வி எழுப்பிய சீமான், மீனவர் சங்கம் என்ற பெயரில் வந்து ஏதாவது பேசிகிட்டு இருக்க கூடாது என்றார்.

சீமான் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு தரப்பினர் எதிர்த்து கோஷமிட்டபடியும் கூச்சலிட்டபடியும் இருந்தனர், ஆவேசமான சீமான் நீ சொன்னா நான் பேசமால் போயிருவேனா... என்றார்

சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கடலுக்குள் பேனா அமைப்பதை எதிர்க்கிறேன் என்று கூறிய சீமான் கடுமையான போராட்டங்கள் நடத்துவார்கள் என்று கூறிவிட்டுச்சென்றார்

இந்தக்கூட்டத்தில் பங்கேற்று மீனவர் சங்கம் சார்பில் பேசிய சிலர் கடலுக்குள் பேனா சிலை அமைத்தால் மீன் வளம் பெருகும் என்று பேசியது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments