பள்ளிப் பருவ காதலை விட முடியாமல், கணவரைப் பிரிந்த இளம்பெண்.. மீண்டும் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்தபோது, காதலன் படுகொலை!

0 4734

சென்னை புழல் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஆவடி வெள்ளாச்சேரியில் வசித்துவந்த சுதா சந்தர் மற்றும் ராகவி பள்ளியில் படித்தபோதே காதலித்ததால், ராகவி வீட்டார், வசந்த் என்ற உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், தனது ஒன்றரை வயதுக் குழந்தையை விட்டுவிட்டு வந்த ராகவியுடன் புழல் அருகே சுதாசந்தர் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் புழல் விநாயகபுரம் அருகே ராகவியுடன் சென்று கொண்டிருந்த சுதாசந்தர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் போலீசார் ராகவிடம் நடத்திய விசாரணையில் அவரது சகோதரர் பரத், தனது உறவினர் உதயா உள்ளிட்டவர்களுடன் வந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments