பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு..!

0 2053

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு மிகுந்த காவலர் குடியிருப்பு அருகே உள்ள மசூதியில் மதியத் தொழுகையின்போது பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் மசூதியின் 2 மாடிகள் இடிந்து தரைமட்டமாகின.

தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு  'தெரீக்-இ-தாலிபன்' அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments