ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

0 1523
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அங்கு பிப்ரவரி 27ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புத்மனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 7-ம் தேதி வரை நடக்கிறது.

5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments