அதிவேகமாக வந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

அரியலூர் அருகே, சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கிய தனியார் பேருந்து, பக்கவாட்டில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அரியலூர் ராயபுரம் பகுதியில் அதிவேகமாக வந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கி, பக்கவாட்டில் கவிழ்ந்தது.
பேருந்தை ஓட்டிக்கொண்டே ஓட்டுநர் செல்போனுக்கு சார்ஜ் போட முயற்சித்ததாக கூறப்படும் நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.
விபத்து குறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடத்தில் தடுப்புகளோ, எச்சரிக்கை பலகைகளோ வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Comments