ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நாடு திரும்பிய தூதரக அதிகாரிகள்..!

0 945

ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, தூதரக ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

கடந்த வெள்ளிக்கிழமை அஜர்பைஜான் தூதரகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்தியதில், தூதரக பாதுகாப்பு பிரிவின் தலைவர் உயிரிழந்தார்.

மேலும் இருவர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தனிப்பட்ட பிரச்சனைகளால் தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட தூதரக அதிகாரிகள், அஜர்பைஜான் தலைநகர் பாகுவிற்கு சென்றடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments