புதிய செல்போனை தாயார் வாங்கித் தராததால் உயர் அழுத்த மின்கோபுரத்தில் ஏறி மாணவன் தற்கொலை மிரட்டல்

0 1508

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தாயார் செல்போன் வாங்கி தராததால் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர், 200 அடி உயர உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

மோரை நியூ காலனியைச் சேர்ந்த சுமதியின் 15 வயது மகன் , 10-ம் வகுப்பு படித்து வருகிறான். சுமதியிடம் அவரது மகன் புது செல்போன் கேட்டதாகவும், இதற்கு படிப்பு பாதிக்கப்படும் என கூறி, செல்போன் வாங்கி தரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் வீட்டை விட்டு வெளியேறி, உயர் அழுத்த மின்கோபுரத்தில் ஏறி  தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளான். தகவலின்பேரில் வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், மாணவனிடம்  சாமர்த்தியமாக பேசி கீழே வரச் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments