காரை வழிமறித்து ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் : கேரளாவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!

0 1319
காரை வழிமறித்து ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் : கேரளாவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!

ஈரோடு அருகே காரை வழிமறித்து உரிமையாளரை தாக்கி 2 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 21ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த விகாஷ் கோவை நோக்கி, பவானி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த மர்ம கும்பல் விகாஷை தாக்கி இறக்கிவிட்டு, காரில் இருந்த 2 கோடி ரூபாய் பணத்தை காருடன் எடுத்துச் சென்றதாக விகாஷ் போலீசில் புகாரளித்தார். அடுத்த சில மணி நேரங்களில் சித்தோடு அருகே அந்த கார் மீட்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சித்தோடு அருகே போலி நம்பர் பிளேட்டுடன் வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்ததில் வீச்சறிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளன.

சந்தேகமடைந்த போலீசார் விசாரித்ததில், காரில் இருந்த கேரளாவைச் சேர்ந்த 6 பேரும், 21ம் தேதி நடந்த கொள்ளையில் ஈடுபட்டதும், மற்றொரு கொள்ளையை நடத்த சென்று கொண்டிருந்த போது பிடிபட்டதும் தெரியவந்தது.

உண்மையில் 21ம் தேதி கடத்தி சென்று கொள்ளையடித்த காரில் 2 கோடி ரூபாய் பணம் இருந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments