தூத்துக்குடி அருகே வீட்டுக்குள்புகுந்து ரவுடி வெட்டி கொலை.. 10 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி அருகே ரவுடியை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கர்பேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் நேற்று இரவு வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். கடந்த 2017-ம் ஆண்டு அங்குசாமி என்பவர் கொலைக்கு பழிவாங்கும் விதமாக கருப்பசாமி கொலை நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments