சீனாவை உயர்வாகப் பேசும் காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

சீனாவை உயர்வாகப் பேசும் காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புனேயில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சீனா போன்ற வலிமைமிக்க நாடு அண்டை நாடாக இருக்கும்போது அதனால் ஏற்படும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றார். கடந்த 9 ஆண்டுகளில் அண்டை நாடுகள் விவகாரத்தில் தேசிய உணர்வுடன் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
இந்து தேசியவாத அரசு என்ற வெளிநாட்டு ஊடகங்களின் எதிர்மறை விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல், பேரிடர் ஏற்படும் நாடுகளுக்கு இந்தியா உதவி அளித்து இருப்பதாகக் கூறினார். முன்னதாக ஜெய்சங்கர் எழுதிய புத்தகத்தின் மராத்தி மொழியாக்கத்தை மகாராஷ்ட்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் வெளியிட்டார்.
Comments