மத்திய பிரதேச மாநிலம் மொரினாவில் போர் விமானங்கள் விபத்து.. 1 விமானி உயிரிழப்பு

0 1078
மத்திய பிரதேச மாநிலம் மொரினா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 என்ற இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் மொரினா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 என்ற இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது இன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது.

சுகோய்-30 போர் விமானத்தில் இரண்டு விமானிகளும், மிராஜ் 2000 போர் விமானத்தில் ஒரு விமானியும் இருந்த நிலையில், இரண்டு விமானிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், விமானப்படை தளபதி விளக்கம் அளித்துள்ளார்.

விபத்துக்குள்ளான சுகோய்-30 போர் விமானம் ரஷ்யாவிலும், மிராஜ் 2000 போர் விமானம் பிரான்ஸிலும் தயாரிக்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments