தனியார் மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து..! மருத்துவர் தம்பதி உயிரிழப்பு

0 1595

ஜார்கண்ட்டில் தனியார் மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் தம்பதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

தன்பாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் முதல் தளத்தில் மருத்துவர் விகாஸ் ஹஸ்ரா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். குடியிருப்பு வளாகத்தில் நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் விகாஸ் ஹஸ்ரா, அவரது மனைவி, மருமகன், உறவினர் மற்றும் வீட்டு பணியாளர் என 5 பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்தையடுத்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments