ஓடும் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி.. சம்பவ இடத்திலேயே காதலி உயிரிழப்பு- காதலன் படுகாயம்..!

0 2849

சென்னையில் ரயில்முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளம் ஓரமாக நடந்து சென்ற காதல் ஜோடி திடீரென ரயில் முன் பாய்ந்தனர்.

இருவரும் தூக்கி எறியப்பட்டதில் சம்பவ இடத்திலேயே இளம்பெண் உயிரிழந்தார். உடனிருந்த இளைஞர் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான இளங்கோ காதலியுடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments