குடியரசு தின நிகழ்ச்சியில் அரசு ஊழியர் பிரிவில் 2 பேருக்கு வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர்..!

0 1430

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், அரசு ஊழியர் பிரிவில் 2 பேருக்கு வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அமைந்தகரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய சரவணன், அப்பதக்கத்தை பெற்றார்.

கடந்த ஆண்டு ஜூலையில், ரோந்து பணியில் அவர் ஈடுபட்டபோது ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிந்து தீ பற்றிய நிலையில், ஈரத்துணியை அதன் மீது போட்டு தீயை அணைத்ததுடன், அருகில் இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்துள்ளார்.

இதேபோல், வேலூரைச் சேர்ந்த ஆண் செவிலியரான ஜெயக்குமார் பொன்னரசுவிற்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

கடந்த மே மாதத்தில் திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் அவர் பணியாற்றியபோது, தீவிர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது. இதை கண்ட அவர், ஜன்னல் கம்பிகளை உடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments