கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதல்... இளைஞர் படுகாயம்

0 1451

சென்னை, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தனது நண்பர் உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இளைஞர் தனுஷ் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தலையில் காயமடைந்துள்ள தனுசுக்கு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடன் வந்த மற்றொரு இளைஞர் மற்றும் எதிரே வந்தவர்கள் என மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments