வாடகைக்கு வீடெடுத்து தங்கி, கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் கைது..!

0 1506

திருப்பூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கேரளாவைச் சேர்ந்த தனது கூட்டாளி கனகராஜுடன் கொழுமம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, பிரிண்டர் மிஷினில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மூணாறில் உள்ள சி.டி.எமில், கள்ள நோட்டுகளை சோதனை செய்யும் விதமாக கனகராஜ் தனது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், கனகராஜை கைது செய்த போலீசார், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபு உட்பட 5 பேரையும் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments