ஆப்பிள் நிறுவனத்தின் 2-ஆம் தலைமுறை ஹோம்பாட் பிப்.3 முதல் கிடைக்கும்..!

0 5947

ஆப்பிள் நிறுவனத்தின் 2ம் தலைமுறை ஹோம் பாட் பிப்ரவரி 3ம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆப்பிளின் சிறப்பு அம்சமான சிரீ நுண்ணறிவு (Siri intelligence) மென்பொருள் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு குடும்பத்தில் உள்ள 6 பேரின் குரல்களை இந்த ஹோம் பாட் வேறுபடுத்தி புரிந்துக் கொண்டு, அவர்களின் கட்டளைக்கு பதில் அளிக்கும்.

S7 சிப் மென்பொருள் மற்றும் சிஸ்டம்-சென்சிங் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அற்புதமான கேட்கும் அனுபவத்தை பெறலாம் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த ஹோம்பாட் விலை 32 ஆயிரத்து 900ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments