உலக சாதனையுடன் இலங்கையை ஊதி தள்ளிய இந்திய வெற்றி..!

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக சாதனையுடன் வெற்றியை பதிவு செய்தது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை குவித்தது.
சுப்மன் கில் 116 ரன்களும்,விராட்கோலி ஆட்டமிழக்காமல் 166 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் இந்திய மைதானங்களில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட்கோலி முறியடித்தார்.
தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆவுட் ஆன நிலையில், அந்த அணி 73 ரன்களிலேயே சுருண்டது.
இதனைடுத்து, 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையையும் படைத்தது.
Comments