இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களே உந்து சக்தி - பிரதமர் மோடி

நாட்டின் வழிகாட்டியாக இளைஞர்கள் திகழ்வதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை கட்டமைப்பதில், இளைஞர்களின் ஆற்றல் முக்கியமானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ஹூப்ளியில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட தேசிய இளைஞர்கள் தின விழாவில் பேசிய பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களே உந்து சக்தி என குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால், நாட்டின் வேளாண்துறையில் புதிய புரட்சி ஏற்படவுள்ளதாகவும், அவை இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஹூப்ளியில் காரில் நின்றபடி பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றபோது, சாலையின் இருமருங்கிலும் திரண்டு மக்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர்.
அப்போது, பாதுகாப்பை மீறி பிரதமருக்கு மாலை அணிவிக்க முயன்ற நபரை, பாதுகாவலர்கள் உடனடியாக வெளியேற்றினர்.
Comments