133 நாட்கள் படம் பிடிக்கப்பட்ட சூரியனின் காணொளியை வெளியிட்டது நாசா

தொடர்ந்து சூரியனை 133 நாட்களாக படம் பிடித்த காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.
சூரியனின் இயக்கம் குறித்த ஆய்வம் கடந்த 2010ம் ஆண்டு முதல் அதனைப் படம் பிடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் டிசம்பர் 22 வரை தொடர்ந்து 133 நாட்கள் சூரியனை அந்த ஆய்வகம் படம் பிடித்த காணொளி வெளியாகி உள்ளது.
இதன் மூலம் சூரியன் மட்டும் இன்றி பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரங்கள் செயல்பாடுகள் குறித்தும் தெளிவான ஆய்வு மேற்கொள்ள முடியும் என நாசா தெரிவித்துள்ளது. 27 நாட்களுக்கு ஒருமுறை சுழலும் சூரியனின் சுழற்சி டைம்லாப்ஸ் முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
Comments