பெங்களூர், உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் அதிரடி சோதனை..!

கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆறு இடங்களில் தேசியப்புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ரேஷான் தாஜூதீன் ஷேக் மற்றும் ஹூசேர் ஃபர்ஹான் பைக் ஆகிய இரண்டு பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷிவமோகா மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத சதி தொடர்பான வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிறிப்டோ வாலட் மூலமாக தீவிரவாதச்செயல்களுக்கு பணப்பரிவர்த்தனையில் கைது செய்யப்பட்ட இருவரும் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments