ஊருக்குள்ள நானும் பெரிய ரெளடிதான் மாமுல் கொடு.. காய்கறி வியாபாரியை தாக்கி பணம் பறித்த நபர் கைது..!

தாம்பரத்தில் மாமூல் தரமறுத்த காய்கறி வியாபாரியை, மதுபோதையில் கத்தியால் குத்திய நபரை, போலீசார் கைதுசெய்தனர்.
மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கந்தன் என்பவர், முடிச்சூர் சாலையில் வாகனம் மூலம் காய்கறி வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரிடம், தாம்பரத்தில் தான் பெரிய ரவுடி எனக்கூறி ஒருவர் மாமூல் கேட்டுள்ளார்.
கந்தன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், விற்பனைக்காக வைத்திருந்த வெங்காயம், தக்காளியை சாலையில் வீசி எறிந்ததுடன், கந்தனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், தாம்பரம் குறிஞ்சி நகரை சேர்ந்த 50 வயதான துளசி என்பவரை கைது செய்து, சிறையிலடைத்தனர்.
Comments