அணுசக்தி நிலைய விவரத்தை பகிர்ந்த இந்தியா, பாகிஸ்தான்..!

0 1318

அணுசக்தி நிலையங்கள், சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன.

அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடைபெறுவதை தவிர்க்கவும், சிறை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், கடந்த 1988ம் ஆண்டு இருநாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.

1991ம் ஆண்டில் அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி இருநாடுகளும் பரஸ்பரம் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலைய விவரத்தை பகிர்ந்து வருகின்றன. 

அதன்படி 32வது முறையாக இருநாடுகளும் புத்தாண்டு நாளில் பரஸ்பர விவரங்களை பகிர்ந்து கொண்டன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments