பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 2 திமுகவினர்.. கதறி அழுத காவலர்..

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் நிர்வாகிகள் இருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நேற்று தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், திமுக பெண் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் காவலரிடம் 2 இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர் கதறி அழுததை பார்த்த சக போலீசார் இளைஞர்களை மடக்கி பிடித்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன், சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம் என்பதும், இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது கட்சி நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவலர் இது தொடர்பாக புகார் அளித்துள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Comments