பொங்கல் தொகுப்பில் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு செங்கரும்பு சேர்த்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கக்கோரி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கரும்பு தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழுக்கரும்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு நிகழ்வினை ஜனவரி 2ஆம் தேதிக்கு பதில் 9ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும், பொங்கல் பரிசுக்கான டோக்கன் கொடுக்கும் பணி ஜனவரி 3ஆம் தேதி முதல், 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரும்பு ஒன்றை 15 முதல் 20 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
Comments