2037-க்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும்..!

0 3504

2037-ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் உலகின் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் என இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 6.4 சதவீதமாக இருக்குமென்றும், அதற்கடுத்த 9 ஆண்டுகளில் இந்த விகிதம் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில், அதற்கு பிந்தைய 2021-22-ம் நிதியாண்டில் 8.7 சதவீதமாக வளர்ச்சியடைந்தது இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாற்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments