குடிகார மணமகன் வேண்டாம்... கூலித்தொழிலாளி போதும் - மத்திய அமைச்சர் கெளசல் கிஷோர் 'அட்வைஸ்'!

0 1832

பெண்களை, குடிப்பழக்கம் கொண்ட அதிகாரிக்கு திருமணம் செய்துவைப்பதைக்காட்டிலும், கூலித்தொழிலாளிக்கு மணம் செய்துவைக்கலாம் என, மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சர் கெளசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில், போதை மறுவாழ்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய கெளசல் கிஷோர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தனது மகன், திருமணமான மூன்றே ஆண்டுகளில் உயிரிழந்ததால், 2 வயது குழந்தையுடன் மருமகள் விதவையாகிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.

தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மனைவி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தபோதும், மகனை காப்பாற்றமுடியவில்லை எனவும் தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments