ஆன்லைனில் கடன் வாங்கி கட்டாத நபரை போலீசில் நூதன முறையில் சிக்க வைத்த சம்பவம்..!
ஆன்லைனில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருந்த நபரை வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் செய்வதாக கூறி நூதன முறையில் போலீசில் சிக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று, மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு பேசிய நபர் ஜப்பானிலிருந்து பேசுவதாக கூறி மாங்காடு முத்தமிழ் நகரில் கபீர் முகமது வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த மாங்காடு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, செல்போன் அழைப்பை வைத்து விசாரித்ததில், கபீர் முகமது 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்ததும், விபத்தில் காயமடைந்த பின்னர் புழல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதும் அம்பலமானது.
பழைய முகவரியை பயன்படுத்தி லோன் ஆப்-பில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்று கபீர் முகமது திரும்ப செலுத்தாமல் இருந்ததன் காரணமாக அந்நிறுவனத்தினர் இவ்வாறு செய்திருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர்.
Comments