அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி மனு.. தகுந்த உத்தரவளிக்க ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

0 1871
அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி மனு.. தகுந்த உத்தரவளிக்க ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வணிக ரீதியாக நடத்தப்படுவதால், அனுமதி வழங்கக்கூடாது என கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு இன்று விசாரித்தது.

அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் ஏதுமில்லாத நிலையில், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டத்தில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை வரவழைத்து வணிக ரீதியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அலகுமலை அடிவாரத்தில் பழமையான மரங்கள் அகற்றப்படுவதாகவும், அலகுமலையை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடமாக அரசு அறிவிக்கவில்லை எனவும் மனுவில் சொல்லப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments