'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே ரூ.41 கோடி வசூல்

0 3794

'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே 41 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டில் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்ற 'அவதார்' திரைப்படத்தின், 2ஆம் பாகம் வெள்ளிக்கிழமையன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது.

இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான அப்படம், முதல் நாளில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களின் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்ததாக கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டில் வெளியான 'அவெஞ்சர்ஸ் - தி என்ட் கேம்' திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments