உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது ரஷ்யா 60 ஏவுகணைகளுடன் பலத்த தாக்குதல்..!

உக்ரைன் மீது ஒரே நாளில் ரஷ்யா 60க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.
இதன் காரணமாக முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான வீடுகள்இருளில் மூழ்கிக்கிடக்கின்றன.4 நகரங்களில் குண்டு வெடிப்பு சத்தமும் துப்பாக்கிச் சண்டை ஓசைகளும் தொடர்ந்து கேட்கப்படுகின்றன.
கடலில் இருந்து ரஷ்யா ஏவுகணைகளை ஏவியதாகவும் விமானம் மூலம் குண்டுகளை வீசியதாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நான்கு மாடிக் கட்டடம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பத்து பேர் படுகாயம் அடைந்தனர்
Comments