பெண் கவுன்சிலரிடம் நகை பறித்ததாக கைதான சிறுவன்.. போலீசாரின் பிடியிலிருந்து தப்பி மீண்டும் பிடிபட்டான்..!

சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலரின் நகையை பறித்ததாக கைதான சிறுவன், போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டான்.
சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு திமுக கவுன்சிலரான சரஸ்வதி, கடந்த 13ஆம் தேதி தலைமைச்செயலகம் அருகே
நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரிடமிருந்து மூன்றரை சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ஜாபர் மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர்.
கூர்நோக்கு இல்லத்தில் சேர்ப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்ட சிறுவன், போலீசாரிடமிருந்து தப்பிய நிலையில், தனிப்படை அமைத்து தேடிய போலீஸார், திருவொற்றியூர் பகுதியில் பதுங்கியிருந்தவனை நேற்றிரவு கைது செய்தனர்.
Comments