நர்சிங் கல்லூரி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை..? நடவடிக்கை எடுக்குமாறு தாளாளரிடம் மாணவிகள் வலியுறுத்தல்..!

0 2138
நர்சிங் கல்லூரி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை..? நடவடிக்கை எடுக்குமாறு தாளாளரிடம் மாணவிகள் வலியுறுத்தல்..!

நாகப்பட்டினத்தில், நர்சிங் கல்லூரி மாணவிக்கு உடற்கூறியியல் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

உடற்கூறியியல் ஆசிரியராக பணியாற்றும் சதீஷ் என்பவர், மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு அழைப்பது போலவும், பதிலுக்கு அந்த மாணவி பேருந்துக்கு காசில்லை என, பல காரணங்களை சொல்லி சமாளிப்பது போலவும், செல்போன் உரையாடல்கள் வெளியாகியுள்ளன.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி தாளாளரிடம் மாணவிகள் முறையிட்டனர்.

தகவலறிந்து வந்த சமூகநலத்துறை அதிகாரிகள் மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தி பின்னர் நாகை ஆட்சியர் அருண் தம்புராஜிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். காவல்துறை விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments