மயங்கி விழுந்த நகைக்கடை ஊழியர்.. வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 380 சவரன் தங்கநகை பத்திரமாக மீட்பு..!

சென்னை பாடி மேம்பாலத்தில் விபத்தில் சிக்கி மயக்கமடைந்து கிடந்த நகை கம்பெனி ஊழியரை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து சென்றதுடன் அவரிடம் இருந்த ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் சிவ ஆனந்த். இவர்,பாடி மேம்பாலம் வழியாக வீட்டுக்கு சென்ற போது இரு சக்கர வாகனத்தில் சென்றவர் ஒருவர் விபத்தில் சிக்கி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு ஓடோடி சென்று மீட்டார்.
விசாரணையில் விபத்தில் சிக்கியவர் சென்னை மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்த ஹரிஹரன் என்பதும், இவர் புழல் இயங்கி வரும் பாக்கியம் ஜெம்ஸ அண் கோல்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.இதையடுத்து நகைக்கான ஆவணங்கள் இருந்ததால் கோல்ட் நிறுவனத்தின் இயக்குனர் கதிரவனை நேரில் அழைத்து 380 சவரன் தங்க நகைகளை jபோலீசார்ஒப்படைத்தனர்.
விபத்தில் சிக்கியவரை அவ்வழியாக சென்றவர்கள் கண்டும் காணாமல் சென்ற நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
Comments