தைவான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனாவின் அணு ஆயுத விமானங்கள்..!

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் விமானங்களை சீனா அனுப்பியதாக தைவான் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன், தைவானிலிருந்து உணவு பொருட்கள், மீன் மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்ய, சீனா புதிதாக தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் 18 H-6 விமானங்கள் உள்பட 21 விமானங்கள், தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments