''போதைப்பொருட்கள், விலங்குகள் கடத்தலை தடுக்க எல்லைக்கடந்து கண்காணிப்பு'' - எம்.வி.எஸ். சவுத்ரி

0 931

போதைப்பொருள் மற்றும் விலங்குகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க, இந்திய எல்லை கடந்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக, சுங்கத்துறையின் சென்னை மண்டல முதன்மை ஆணையர் எம்.வி.எஸ். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காண்டாமிருக கொம்பு, யானை தந்தம், விலங்குகளின் தோல் உள்ளிட்டவற்றின் கடத்தல்களை கண்டறிவது சவாலானது என்றும், கடத்தல் சந்தை வன உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments