விருத்தாசலத்தில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே கடந்த 5ந் தேதி ஆலடிரோடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் இருசக்கர வாகனம் திருடு போனது. இதன்பேரில் கம்மாபுரம் கடைவீதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த மூவரை மடக்கி விசாரித்தனர்.
இதில் மூவரும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து 17 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Comments