மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 8 வயது சிறுவன்.. 85 மணி நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்பு..!

0 2088

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன், 85 மணி நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

கடந்த 6ஆம் தேதியன்று பெதுல் மாவட்டத்தில், தன்மய் என்ற 8 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

சுமார் 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்ததால், அவனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

சுமார் 4 நாட்களாக சிறுவனை மீட்க அவர்கள் போராடிய நிலையில், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments