மடியில் பயணம் நொடியில் மரணம் புத்திசொன்னா புளிக்குதா..? 2k காதல் ஜோடியின் அட்ராசிட்டி

0 2568

சென்னை தாம்பரம் அருகே காதலியை மடியில் வைத்து இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற இளைஞரை மறித்து ஆட்டோ ஓட்டுனர் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரித்து அனுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை தாம்பரம் அருகே டியூக் இரு சக்கர வாகனம் ஒன்றில் தலைக்கவசம் இல்லாமல், காதலியை மடியில் அமரவைத்தபடி 2k கிட்ஸ் இளைஞர் ஒருவர் அழைத்துச்சென்றார்.

அந்த இளைஞர் வாகனம் ஓட்டும் முறையை பார்த்து காண்டான ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், அந்த காதலர் ரதத்தை மறித்து நிறுத்தினார்.

தங்கள் வாகனத்தை மறித்ததோடு, தங்கள் காதல் பயணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அந்த இளம் பெண்..!

அந்தவழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் சவாரி காதலர்களுக்கு அறிவுரை வழங்க, அந்த பெண்ணோ அடங்க மறுத்து ஆவேசமானார். போதையில் இருப்பதாக ஆட்டோ ஓட்டுனர் கூறிய நிலையில், நிலைமை விபரீதமாவதை உணர்ந்து அந்த இளைஞர் காதலியை அழைத்துச்சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments