தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய புயல் சின்னம்.?
தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, டிசம்பர் 8ஆம் தேதி வாக்கில் வலுவடைந்து புதிய புயல் சின்னமாக உருவெடுக்கக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பிருந்தாலும் ரெட் அலர்ட் கொடுக்கப்படவில்லை.
Comments