திமுக கவுன்சிலரை வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூலிபடையினர் 4 பேர் கைது

0 1527

சேலம் அருகே திமுக கவுன்சிலரை வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூலிபடையினர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேட்டூர் குள்ளவீரன்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம், கடந்த 30-ந்தேதி நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்க காரில் வந்தபோது வீச்சரிவாளுடன் தயாராக நின்ற மர்மநபர்கள் சரமாரியாக வெட்டினர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு கவுன்சிலர்கள் ஓடி வந்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீஸ் விசாரணையில், பொன்நகரை சேர்ந்த பிரபு, தனது அண்ணன் மாதேஷ் , தாய்மாமன் பழனிச்சாமியை வெங்கடாசலத்தின் கூட்டாளிகள் வெட்டி கொலை செய்ததற்கு பழிவாங்க கூலிபடையை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து 4 பேரை கைது செய்து, 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments