கோவையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார் இபிஎஸ்

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் கைவிடப்படுவதாகவும், மின் கட்டண உயர்வால் கொங்கு மண்டலத்தில் தொழில் வளர்ச்சி பின்னடவை சந்தித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தும் கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதில் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில், தற்போது உள்ள அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே தொடரும் என்றார்.
Comments