இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க ரூ.500 லஞ்சம்.. ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனையை முற்றுகையிட்ட உறவினர்கள்..!

0 1324
இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க ரூ.500 லஞ்சம்.. ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனையை முற்றுகையிட்ட உறவினர்கள்..!

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க, மருத்துவ உதவி பணியாளர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறி, நள்ளிரவில் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

நுரையீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்றுவந்த மனோகரன் என்பவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.

அவரது உடலை உடற்கூராய்வுக்காக பிணவறையில் வைக்க, மருத்துவ உதவி பணியாளர் இளையராஜா 500 ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதற்கான ரசீதை உறவினர்கள் கேட்டபோது அவர் கொடுக்காததால், லஞ்சம் பெற்ற இளையராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் இன்று காலை உடற்கூராய்வுக்கு பின் உடலை உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments