குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 89 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டு கோடியே 39 லட்சம் பேர் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் தொகுதிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் நேரடி மோதல் நடைபெறுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் முதல்முறையாக குஜராத் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சியின் விளைவாக 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்றும். குஜராத் தேர்தலிலும் அதே போல் அதிகளவிலான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments