விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் - வீராங்கனைகளுக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்கி கெளரவிப்பு..!

0 1098

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர் - வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கெளரவித்தார்.

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில், நடப்பாண்டின் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விளையாட்டுத்துறையின் உயரிய விருதான தயான் சந்த் கேல் ரத்னா விருது(Dhyan Chand Khel Ratna Award), தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் உள்பட 25 பேருக்கு, அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த பயிற்சியாளர்கள் 7 பேருக்கு, துரோணாச்சாரியர் விருது வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments