எல் சால்வடாரில் உள்ள சாப் ராஸ்டிக் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை..!

0 1827

எல் சால்வடார் நாட்டிலுள்ள சாப்ராஸ்டிக் (Chaparrastique ) எரிமலை வெடிக்கத் தொடங்கியதால், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சான் சால்வடாருக்கு கிழக்கே 135 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்து, சாம்பல் புகை மேலெழுந்தது.

இதையடுத்து, 3 நகராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு,

10 ஆயிரம் பேருக்கு மேல் தங்கும் வகையில் 26 தங்குமிடங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. எரிமலையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments