இளைஞர்களிடம் அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் - பிரதமர்

0 1484
நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளை அறிவது உள்ளிட்ட பல்வேறு நவீனமயமாக்கட்டப்பட்ட வசதிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளை அறிவது உள்ளிட்ட பல்வேறு நவீனமயமாக்கட்டப்பட்ட வசதிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாக்கல் செய்யப்பட்ட, தீர்வு காணப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை காண்பிக்கும் விர்சுவல் ஜஸ்டிஸ் கிளாக் (Virtual Justice Clock), இணையதளம், நீதிபதிகளுக்கான ஜஸ்டிஸ் (JustIS) செயலி உள்ளிட்டவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவின் பலமே அரசியலமைப்பு தான் என்றும், நாட்டின் வேகமான முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சியை உலகமே உற்று நோக்குவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments